11 நாடுகள் மீது அமெரிக்கா விதித்த தடை நீக்கம்! - Yarl Voice 11 நாடுகள் மீது அமெரிக்கா விதித்த தடை நீக்கம்! - Yarl Voice

11 நாடுகள் மீது அமெரிக்கா விதித்த தடை நீக்கம்!

வடகொரியா உட்பட 10 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள், அமெரிக்காவினுள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடையை, அமெரிக்கா நேற்று திங்கட்கிழமை நீக்கியுள்ளது.

வடகொரியா, எகிப்து, ஈரான், ஈராக், லிபியா, மாலி, சோமாலியா, தெற்கு சூடான், சூடான், சிரியா, யேமன் ஆகிய நாடுகளை மிகவும் ஆபத்தான நாடுகளாக அமெரிக்கா வரையறுத்து, அந்நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்காவினுள் நுழையவும் கடந்த 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தடை விதித்திருந்தது.

தற்போது இந்தத் தடையை அமெரிக்கா நீக்கியுள்ளபோதும், அப்பதினொரு நாடுகளையும் சேர்ந்தவர்கள், அமெரிக்காவினுள் நுழைய புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எதிர்நோக்க நேரிடுமென, அமெரிக்க உட்துறை பாதுகாப்புச் செயலாளர் கிரிஸ்ட்ஜென் நீல்சன் தெரிவித்துள்ளார்.

தமது நாட்டினுள் யார் நுழைகின்றார்கள் என்பது தொடர்பாக அறிந்துகொள்வது மிக முக்கியமான விடயம். இந்நிலையில், மேற்படி 11 நாடுகளையும் சேர்ந்தவர்கள், அமெரிக்காவினுள் அனுமதிக்கப்பட முன்னர், கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்களெனவும், அவர் கூறியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post