புலிகள் பிரதிநிதிகள் கூட்டமைப்பே என 16 எம்.பிக்களும் ஒத்துக்கொள்வார்களா? -தேர்தலுக்காக ஏமாற்ற வேண்டாம் என்கிறார் அங்கயன் எம்.பி- - Yarl Voice புலிகள் பிரதிநிதிகள் கூட்டமைப்பே என 16 எம்.பிக்களும் ஒத்துக்கொள்வார்களா? -தேர்தலுக்காக ஏமாற்ற வேண்டாம் என்கிறார் அங்கயன் எம்.பி- - Yarl Voice

புலிகள் பிரதிநிதிகள் கூட்டமைப்பே என 16 எம்.பிக்களும் ஒத்துக்கொள்வார்களா? -தேர்தலுக்காக ஏமாற்ற வேண்டாம் என்கிறார் அங்கயன் எம்.பி-

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது என மார்தட்டிக் கூறும் கட்சியின் 16
எம்.பிக்களும் தாங்கள் புலிகளின் பிரதிநிதிகள்தான் என்பதை எழுத்து மூலம் வெளிப்படுத்த முடியுமா?
இவ்வாறு கேளிவி எழுப்புகின்றார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
அங்கஜன் இராமநாதன்.

தாமே புலிகளின் பிரதிநிதிகள் என்பதை த.தே.கூ எம்.பிக்கள் உறுதிப்படுத்தி எழுத்து மூல ஆவணம் சமர்ப்பித்தால்
அதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். புலிகள் மீதான தடையை நீக்க இதன்மூலம் நடவடிக்கை எடுக்க முடியும்
எனவும் அவர் கூறினார்.

விடுதலைப் புலிகளின் புரட்சிப் பாடல்கனை பயன்படுத்த எங்களுக்கும் உரிமை உண்டு என அங்கயன் தெரிவித்திருந்தார்.
இத குறித்து கருத்து வெளியிட்ட வடமாகாண சபை அவைத் தலைவரும் தமிழரசுக் கடசி சிரேஷ்ட தலைவருமான சி.வி.கே.சிவஞானம்ரூபவ்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதுள்ள தடைழயை நீக்க அங்கயன் நடவடிக்கை எடுப்பாரா? ஏன கேள்வி
எழுப்பினார்.

இந்நிலையில் பொம்மைவெளி பகுதியில் நேற்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் சிவாஞானத்துக்கு
அங்கயன் மேற்கண்டவாறு சவால் விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆட்சிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்கப்பட்ட நிலையிலேயே
ஒஸ்லோவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இன்று மீண்டும் தமீழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்க முடியுமா? என்று சி.வி.கே.சிவஞானம் கேள்வி
எழுப்புகின்றார். ஊங்களின் அனைத்து கூட்டமைப்பு எம்.பிக்களும் நாங்கள் புலிகளின் பிரதிநிதிகளே என
எழுத்தில் தந்தால் அதனைக் கொண்டு புலிகள் மீதான தடையை நீக்க நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அங்கயன் கூறினார்.

ஆனால் புலிகள் தன்னை கொலை செய்ய திட்டம் போரட்டதாகவும்ரூபவ் இராணுவத்தைப் போல் புலிகளும் போர்
குற்றங்களில் ரூடவ்டுபட்டார்கள் என்றும்ரூபவ் தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்படவில்லை என்றும் அக்
கட்சிக்குள் உள்ளவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் முரண்பட்ட கருத்துக்களை வெளியிடுகின்றார்கள் எனவும்
அங்கயன் சுட்டிக்கட்டினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post