முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட தேராவில் பகுதியில் ஒருதொகுதி வாக்காளர் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்கு விநியோகிக்கவேண்டிய ஒருதொகுதி வாக்குச்சீட்டுக்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது.
குறித்த பகுதியில் தபால் ஊழியர் இல்லாத காரணத்தால் வழக்கமாக கிராம வாசி ஒருவரிடம் கடிதங்களை வழங்கியே மக்களுக்கு விநியோகிப்பதனை வழக்கமாக கொண்டிருந்த தபால் ஊழியரும் குறித்த பகுதிக்கான வாக்காளர் அட்டைகளையும் கிராம வாசி ஒருவரிடம் கொடுத்து மக்களுக்கு வழங்குமாறு கூறியுள்ளார்.
இவ்வாறு வழங்கப்பட்ட 288 வாக்காளர் அட்டைகளும் ஒரு வீட்டில் இருப்பதாக புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் பொலிசார் தேர்தல் அலுவலக அதிகாரிகள் ஆகியோர் குறித்த பகுதிக்கு சென்று வாக்குச்சீட்டுக்களை மீட்டுள்ளதுடம் தபால் ஊழியர் மற்றும் குறித்த கிராம வாசியையும் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment