மேற்கு வங்கத்தில் கால்வாயில் பேருந்து விழுந்த விபத்தில் 36பேர் பலியாகினர். மேற்கு வங்க மாநிலம் ஷிகார்பூரில் இருந்து நாடியா மாவட்டத்தில் உள்ள மால்டாவுக்கு நேற்றுமுன்தினம் அதிகாலை அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. காலை 6மணி அளவில் முர்ஷிதாபாத் மாவட்டம் பாலிர்காட் என்ற இடத்தில் கோக்ரா கால்வாயை கடந்து செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பாலத்தின் தடுப்பை உடைத்துக் கொண்டு கால்வாயில் விழுந்தது. இந்த விபத்தில் 36பேர் உயிரிழந்தனர். இவர்களில் 10 பேர் பெண்கள். விபத்து குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர். மேற்கு வங்க அரசு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 இலட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1இலட்சம், சிறிய காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50ஆயிரம் நஷ்டஈடு வழங்க அறிவித்துள்ளது.
Post a Comment