‘நித்திரையா தமிழா’ எழுச்சிப் பாடலை ஒலிபரப்ப உரிமை உண்டு -எம்.பி அங்கஜன் இராமநாதன்- - Yarl Voice ‘நித்திரையா தமிழா’ எழுச்சிப் பாடலை ஒலிபரப்ப உரிமை உண்டு -எம்.பி அங்கஜன் இராமநாதன்- - Yarl Voice

‘நித்திரையா தமிழா’ எழுச்சிப் பாடலை ஒலிபரப்ப உரிமை உண்டு -எம்.பி அங்கஜன் இராமநாதன்-

விடுதலைப் புலிகளின் எழுச்சியப் பாடலை ஒலிபரப்ப எமக்கு உரிமை உண்டு என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

தமிழர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் அந்த உரிமைய உண்டு என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட அலுவலகத்தில் நேற்று நண்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-

தேர்தல் விஞ்ஞாபன வெளியிட்டின் போது புரச்சிப்பாடல் போடப்பட்டது என்று கருத்து வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

என்னைப் பொறுத்தவரையில் எமது தமிழ் மக்களுக்கு சொந்தமான இலக்கியம், பாடல்கள் உள்ளது. அந்த வகையிலேயே எமது நிகழ்ச்சியில் நித்திரையா தமிழா என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது.
இந்த பாடல் ஒரு புரட்சிப் பாடலாகும். கடந்த காலங்களில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் தமிழ் தலமைகளை எழுப்புவதற்காவே அந்த பாடல் மக்கள் சார்பில் ஒலிபரப்பப்பட்டது. இந்த பாடலை பாடிய சாந்தன், சுகுமார் ஆகியோர் கடந்த காலங்களில் எனது மேடைகளில் எத்தனையோ பாடல்களை பாடினார்கள்.

அரசிய சூழ்நிலைக்காகவும், கட்டமைப்புக்காகவும், நிகழ்ச்சி தொகுப்பின் போது அந்த பாடல் அன்று ஒலிபரப்பப்பட்டது. நாங்கள் தமிழர்கள்தான் சிறிலங்கா சுதந்திரக் கட்சி யாழ்ப்பாணத்தில் தமிழ் கட்சியாகத்தான் செயற்படுகின்றது. அதற்கான சுதந்திரத்தை ஜனாதிபதி எமக்கு தந்துள்ளார்.

இதனால்தான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் நாங்கள் இருந்து கொண்டு, தமிழ் மக்களுடைய மீள்குடியேற்றத்தை நாங்கள் வலியுறுத்துகின்றோம், காணாமல் போனவர்களை பற்றி பேசுகின்றோம். அரசியல் கைதிகளை பற்றி பேசுகின்றோம். புதிய அரசியல் சீர்திருத்தத்தில் வர வேண்டிய விடயங்களை பற்றி பேசுகின்றோம். அபிலாசைகள், அபிவிருத்திகளைப் பற்றியும் நாங்கள் பேசுகின்றோம்.

வடமாகாண சபை பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் போராட்டத்தி சம்மந்தப் படாதவர்கள் இன்று போராட்டத்தை பற்றி பேசுகின்றார்கள் என்று. அப்படிப் பார்த்தால் யாழ்ப்பாணத்தில் உள்ள அனைவரும் போராட்டத்தில் சம்மந்தப்பட்டவர்கள்தான். நாங்கள் உணர்வு ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் நாங்கள் போராட்டத்தில் சம்மந்தப்பட்டவர்கள்தான். அது எங்களுக்கான நடந்த போராட்டம். எமது உரிமைக்காக நடந்த போராட்டம்.

இவ்வாறு இருக்கையில் போராட்டத்தில் சம்மந்தப்பட்டவர்கள்தான அதை பற்றி பேசலாம் என்றார். அவர் ஆயுதக் குழுக்களை சொல்கின்றாரா? அவர் தமக்கு ஏற்றவாறு அரசியலை திசை திருப்பிக் கொண்டு போகின்றார். தமிழர்கள் அனைவருக்கும் போராட்டத்தைப் பற்றி பேச உரிமை உண்டு. அதே போன்று புரட்சிப் பாடல்களை பாயன்படுத்துவதற்கும் தமிழர்களுக்கு உரிமை உண்டு என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post