வவுனியா இராசேந்திரன்குளம் பகுதியில் நேற்று (28.01) மாலை 5மணியளவில் சட்டவிரோதமான முறையில் பட்டா ரக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட வேப்பங்குற்றிகளை நெளுக்குளம் பொலிசார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்று மாலை நெளுக்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ. எம். எஸ். அத்தநாயக்கவிற்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் அவரது தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் இராசேந்திரன்குளம் பகுதியிலிருந்து பொன்னாவரசன்குளம் பகுதிக்கு சட்டவிரோதமான முறையில் பட்டா ரக வாகனத்தில் 12வேப்பம் மரக்குற்றிகளை கொண்டு சென்றபோது அவற்றைக் கைப்பற்றியதுடன் வாகனத்தின் சாரதியான மாரிமுத்து சந்திரபாலன் வயது 41 என்பவரையும் கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் இன்று மாலை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் நெளுக்குளம் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Post a Comment