இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டியில், ஐ.சி.சி. விதிமுறையை மீறி செயற்பட்ட பங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ரபீ முர்தஷாவுக்கு போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் தண்டம் அறவிடப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த போட்டியில் ஐ.சி.சி. விதிமுறையை மீறிய இலங்கை அணியின் தனுஷ்க குணதிலகவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முக்கோணத் தொடரின் இறுதிப்போட்டி கடந்த சனிக்கிழமை (27) நடைபெற்றது.
இந்த போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸின் விக்கட்டை கைப்பற்றிய மஷ்ரபீ முர்தஷா, ஆக்ரோஷமாக பேசியவாறு குசால் மெண்டிஸின் அருகில் சென்று திரும்பினார். இது ஐ.சி.சி. விதிமுறையை மீறிய செயல் என குறிப்பிட்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பால் ஆட்டமிழந்த பின்னர், துடுப்பாட்ட வீரரை சீண்டும் வகையில் செயற்பட்ட குற்றத்திற்காக தனுஷ்க குணதிலகவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஐ.சி.சி. விதிமுறையை மீறிய குறித்த இருவருக்கான குற்றப்புள்ளிகளில், ஒவ்வொரு புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன.

Post a Comment