யாழ்.பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் வருட மாணவர் ஒருவருக்கு சர்வதேச தொழில்நுட்ப போட்டி மற்றும் கண்காட்சியில் கலந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
யாழ் பல்கலைக்கழக்கத்தில் கல்வி பயிலும் சோமசுந்தரம் வினோஜ்குமார் என்ற யாழ் மாணவருக்கே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
கணிதம் தொடர்பிலான பிர்சசனைகளுக்கு மிக எளிய முறையில் தீர்வைக் காணக்கூடிய உபகரணம் ஒன்றை அமைத்து, அதனை காட்சிப்படுத்திய பின்னர் இந்த சர்வதேச கண்காட்சிக்கான சந்தர்ப்பத்தை அந்த மாணவர் பெற்றுள்ளார்.
குறித்த மாணவன் ஏற்கனவே பல்வேறு தொழில்நுட்ப உபகரணங்களை தயாரித்ததன் மூலம் தேசிய ரீதியில் 32 விருதுகளையும், சர்வதேச ரீதியில் 81 விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்த போட்டி மற்றும் கண்காட்சி அடுத்தமாதம் 1ஆம் திகதியிலிருந்து 6ஆம் திகதி வரையில் தாய்லாந்தின் பெங்கொக் நகரத்தில் இடம்பெற உள்ளதுடன், 97 நாடுகளை உள்ளடக்கிய சுமார் 1000 பல்கலைக்கழகங்கள் இந்த கண்காட்சியில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment