முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு நகரப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மேட்டார் சைக்கிளை செலுத்தியதுடன், அவ்வீதியால் பயணித்த பொலிஸ் அதிகாரிக்கு சாகசம் காட்டிய இருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தைதான இவர்களின் உடமையில் இருந்து 2 கிராம் கஞ்சா மீட்கப்பட்டதாகவும், கஞ்சா பாவித்துவிட்டே இவர்கள் இவ்வாறு நடந்துகொண்டதாகவும் பொலிஸாரால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.
இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளுடன் நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து இருவரையும் பெப்ரவரி 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்
Post a Comment