அரசியல் கைதிகள் விவகாரம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்ற முதலமைச்சர் - Yarl Voice அரசியல் கைதிகள் விவகாரம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்ற முதலமைச்சர் - Yarl Voice

அரசியல் கைதிகள் விவகாரம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்ற முதலமைச்சர்

அரசியல் கைதிகளின் விடுதலைரூபவ் சிறைமாற்றம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி வடமாகாண
முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவிற்கு அவசர வேண்டுகோள் கடிதம் ஒன்றினை நேற்று
அனுப்பிவைத்துள்ளார்.

ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் முதலமச்சர் சிறைச்சாலை உயர்மட்ட உத்தியோகஸ்தர்களுடனும் பேசி
அவர்களின் ஒப்புதல்களையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
சிறைச்சாலைகளில் நீண்ட காலமாக தடுத்து வைத்துள்ள தமிழ் அரசியல்கைதிகளின் உறவினர்கள் நேற்று முன்தினம் வடமாகாண
முதலமைச்சரை கைதடியில் உள்ள அவலுடைய அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இக் கலந்துரையாடலின் போது தமது உறவுகளின் விடுதலையை உறவினர்கள் வலியுறுத்தியதுடன்ரூபவ் போதை வஸ்துகாரர்களுடன்
அவர்களை தடுத்து வைத்திக்காமல்ரூபவ் வேறு சிறைச்சாலைகளுக்க மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

மேலும் அரசியல் கைதிகளுக்காக உரிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள்
விடுத்ததுடன்ரூபவ் அத தொடர்பான மனு ஒன்றினையும் முதலமைச்சரிடம் கையளித்திருந்தனர்.

அரசியல் கைதிகளின் உறவினர்களால் கையளிக்கப்பட்ட மனு தொடர்பில் ஆராய்ந்த முதலமைச்சர் அவர்களின்
கோரிக்கையினை உடனடியாகவே ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கடிதம் ஒன்றினை நேற்று
அனுப்பிவைத்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெனான்டோவிற்கும் அக் கோரிக்கை தொடர்பில்
தெரியப்படுத்தியுள்ளார்.

மேலும் சிறைச்சாலைகளின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய முதலமைச்சர்ரூபவ் அரசியல் கைதிகளின் சிறைகளை மாற்றுவது
தொடர்பில் உள்ள பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பிலும் ஆராந்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post