கையேந்தும் சமூகமாக இருந்தால் தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்படுவர் -தனித்துவத்தைப் பேண வேண்டும் என்கிறார் வடக்கு முதல்வர்- - Yarl Voice கையேந்தும் சமூகமாக இருந்தால் தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்படுவர் -தனித்துவத்தைப் பேண வேண்டும் என்கிறார் வடக்கு முதல்வர்- - Yarl Voice

கையேந்தும் சமூகமாக இருந்தால் தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்படுவர் -தனித்துவத்தைப் பேண வேண்டும் என்கிறார் வடக்கு முதல்வர்-

தமிழ் சமூகம் தமது தேவைகளை தாமே நிறைவேற்றும் தனித்துவமான நிலைக்கு வர வேண்டும் என்று
வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் சமூகம் அடக்கி ஒடுக்கப்பட்டவர்களாக ஒடுங்கி வாழவேண்டிய இக்கட்டான நிலையில் இருந்து
மீள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அல்வாய் இளைஞர் விளையாட்டு கழகத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா நேற்று மாலை 5
மணியளவில் அல்வாய் வடக்கு நாவடியில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து
கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் உரையாற்றுகையில்:-
ஒரு மக்கள் கூட்டம் எப்போது தாம் சார்ந்த மக்களின் தேவைகளையும் அவர்களுக்கான
வழிகாட்டல்களையும் ஒற்றுமையுடன் எதுவித தடங்கல்களுமின்றி முன்னெடுத்துச் செல்ல
முனைகின்றதோ அப்போதே அந்த மக்கட் கூட்டம் அல்லது குறிப்பிட்ட கிராமம் தனித்துவ
நிலைக்கு மேம்பட்டுள்ளது என்பது பொருளாகும்.

ஒரு மக்கள் கூட்டம் தாம் சார்ந்த தேவைகளைத் தாமே முழுமையாக நிறைவுறுத்துகின்ற போது
அவர்கள் மீது வேறு எவரும் அழுத்தங்களைப் பிரயோகிக்கவோ அல்லது
அவர்களைக்கட்டுப்படுத்தவோ முடியாதவர்களாக மாற்றப்படுகின்றனர். ஏன் என்றால் அந்த
மக்கட் கூட்டம் தன்கையே தனக்குதவி என்ற கோட்பாட்டில் ஊறிவிட்டதாலேயே ஆகும்.

சதாகாலமும் ஏனையவர்களின் உதவிகளின் கீழ் வாழுகின்ற சமூகம் அடக்கப்பட்டவர்களாக
ஒடுக்கப்பட்டவர்களாக ஒடுங்கி வாழவேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதே
உண்மை என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post