ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கூட்டவுள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கான அவசர கூட்டத்தைப் புறக்கணிக்க, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணி முடிவு செய்துள்ளது.
ஜனாதிபதியின் கூட்டத்தை புறக்கணிக்க கூட்டு எதிரணி முடிவு செய்திருப்பதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிரணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் கலந்துரையாடி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்றைய கூட்டத்தின் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் ஆதாயங்களை அடைவதற்கு முற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிணைமுறி விவகாரம் தொடர்பாக, பெப்ரவரி 10ஆம் நாளுக்குப் பின்னர் ஜனாதிபதியுடன் , கூட்டு எதிரணி பேச்சு நடத்தும் என்றும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Post a Comment