சமஷ்டி என்ற சொல் இராது ஆனால் அது சமஷ்டி தான் -“ஏக்ய ராஜ்ய” அர்த்தம் குறித்தும் சம்பந்தன் விளக்கம்- - Yarl Voice சமஷ்டி என்ற சொல் இராது ஆனால் அது சமஷ்டி தான் -“ஏக்ய ராஜ்ய” அர்த்தம் குறித்தும் சம்பந்தன் விளக்கம்- - Yarl Voice

சமஷ்டி என்ற சொல் இராது ஆனால் அது சமஷ்டி தான் -“ஏக்ய ராஜ்ய” அர்த்தம் குறித்தும் சம்பந்தன் விளக்கம்-

புதிய அரசியலமைப்பு இடைக்கால அறிக்கையில் சமஷ்டி என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. இது உண்மைதான்.  ஆனால் இடைக்கால அறிக்கையின் உள்ளடக்கம் சமஷ்டியே என்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் நேற்றிரவு நடைபெற்ற தமிழ்மத் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இடைக்கால அறிக்கை தொடர்பில் பல விமர்சனங்கள் இருக்கலாம். ஒன்றை தெளிவாக கூறிக் கொள்ளுகின்றோம். எமது மக்கள் ஏற்காத ஒரு தீர்வை நாங்களும் ஒரு போதும் ஏற்க மாட்டோம். அதேசமயம் தீர்வொன்றைப் பெறுவதற்கு கூடிய முயற்;சி எடுப்போம் எனவும் சம்பந்தன் தெரிவித்தார்

வரவுள்ள தீர்வு பெறுமதியானதாக இருந்தால் அந்தத் தீர்வு தொடர்பாக மக்களுக்கு விளக்குவோம். அவர்களின் அனுமதியைப் பெற்றே அந்தத் தீர்வை நாங்கள் ஏற்றுக் கொள்ளுவோம். அதுதான் எங்களுடைய நிலைப்பாடு எனவும் அவர் கூறினார்.

புதிய அரசியல் சாசனத்தில் இருந்து ஒற்றையாட்சிஇ தமிழீழம் என்ற சொற்பதங்கள் நீக்கப்படுகின்றன.  ஏக்ய ராஜ்ய என்ற சொல்லே அரசியல் சாசனத்தில் இருக்கும். அந்த ஏக்ய ராஜ்ய என்ற சொல்லுக்கு பிளவுபடபடாத ஒருமித்த நாடு என்பதே பொருள் எனவும் சம்பந்தன் விளக்கமளித்தார்.

அரசியல் சாசனத்தின் பிரகாரம் ஆட்சி அதிகாரங்களை பயன்படுத்துவது மத்தியிலும் மாகாணத்திலும் உள்ள அமைப்புகள் என அறிக்கையில் உள்ளது.

மத்திக்கு ஒரு பட்டியல் இருக்கின்றது. மாகாணத்திற்கு பெரிய பட்டியல் உள்ளது. அதேபோன்று உள்ளுராட்சி மன்றங்களுக்கும் ஒரு பட்டியல் வர வேண்டும் என்று நாங்கள் கேட்கின்றோம். அவ்வாறு வந்தால்இ மத்தியிலும்இ மாகாணத்திலும்இ உள்ளுராட்சி மன்றங்களிலும்இ மக்கள் தமது இறைமையின் அடிப்படையில் அதிகாரங்களை பயன்படுத்த முடியுமு;. ஆதன் ஊடாக அவர்களுடைய சுயநிர்ணய உரிமை நிறைவேற்றப்படும்.

மக்களுடைய சுயநிர்ணய உரிமை நிறைவேற்றப்பட்டால் அதுதான் சமஷ்டி.. ரசியல் சாசனத்தில் சமஷ்டி என்ற சொல் இல்லாவிட்டால் எமக்கு அதிகாரம் இல்லை என்று அர்த்தமில்லை எனவும் சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post