தலைவர் பிரபாகரனின் கொள்கைக்கு துரேகமிழையோம் -சாள்ஸ் நிர்மலநாதன்- - Yarl Voice தலைவர் பிரபாகரனின் கொள்கைக்கு துரேகமிழையோம் -சாள்ஸ் நிர்மலநாதன்- - Yarl Voice

தலைவர் பிரபாகரனின் கொள்கைக்கு துரேகமிழையோம் -சாள்ஸ் நிர்மலநாதன்-

தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் கொள்கைக்கு ஒரு போதும் துரோகம் இழைக்கின்ற வகையில்  நான் செயற்படமாட்டேன் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

2 கோடி இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டானது மக்கள் மத்தியில் தேர்தல் கால பரப்புரைக்காகவே சிவசக்தி ஆனந்தன் முன் வைத்துள்ளார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 2 கோடி ரூபாய் இலஞ்சம் வாங்கியுள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

அந்தவகையில் இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவிக்கையில்இ

தமிழ் தேசியக்கூட்டமைப்பு எந்தக் காலத்திலும் எங்கள் மக்களுடைய அரசியல் ரீதியான நகர்வுக்காக முழுமையாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற அமைப்பு. அந்த வகையில் மக்களுக்கு துரோகம் செய்கின்ற வகையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு இலஞ்சம் வாங்க வேண்டிய தேவை இல்லை.

நாங்கள் அவிபிருத்தித் திட்டங்களுக்கு 10 முன்மொழிவுகளை வைக்கின்ற போது அவற்றில் இரண்டு முன்மொழிவுகளையே அவர்கள் செய்கின்றார்கள். கிராமங்களின் கட்டமைப்புக்காக நாங்கள் அரசாங்கத்திடம் சண்டையிட்டு மக்களுக்காக செய்கின்ற சேவையை எவ்வாறு இலஞ்சம் வாங்கியதாக கூறமுடியும்.

தேர்தல் காலத்தில் பொய்ப்பிரச்சாரங்களையும்இகுற்றச்சாட்டுக்களையும் மக்கள் மத்தியில் முன் வைப்பதன் மூலம் மக்களை ஏமாற்றி விட முடியாது. மேலும் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனால் அதனை நிரூபித்துக்காட்ட முடியுமா?

தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் கொள்கைக்கு ஒரு போதும் துரோகம் இழைக்கின்ற வகையில்  நான் செயற்பட மாட்டேன். அப்படி ஒரு துரோகம் இழைக்கின்ற நிலைக்கு வந்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவதை தவிர வரலாற்றில் துரோகம் செய்கின்ற ஒரு பதிவை நான் வாழ்க்கையில் செய்ய மாட்டேன்” என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post