வவுனியா கற்பகபுரம் பகுதியில் இன்று பிற்பகல் இளம் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா கற்பகபுரம் பகுதியில் 5ஆம் ஒழுங்கையில் வசித்து வந்த அர்ச்சுனன் கோகிலவதனி என்ற 21வயதுடைய இளம் பெண் ஒருவரே தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு வவனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை தாய் தந்தை ஆகிய இருவரும் சிதம்பரபுரம் உறவினர்களுடைய வீட்டிற்குச் சென்றுள்ளனர் வீட்டில் சகோதரனுடன் இருந்துள்ள குறித்த பெண்ணிடம் சகோதரன் வெளியே சென்றுவிட்டு வருவதாகத் தெரிவித்துவிட்டுச் சென்று பிற்பகல் 1.30மணியளவில் வீட்டிற்குச் சென்றபோது சமையறையில் குறித்த பெண் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதையடுத்து அயலவர்களின் உதவியுடன் சடலத்தை மீட்டு வைத்தியசாலைக்கு எடுத்து வந்தபோதும் வைத்தியர்கள் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளம் பெண்ணின் உயிரிழப்பு சம்பவத்தில் சந்தேகம் காணப்படுவதாகவும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment