தமிழ் மக்களுக்கு துரோகமிழைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான அணி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
இதற்கு த.தே.கூ, ஜ.தே.க தவிர்ந்த அனைத்து கட்சிகள், பொது அமைப்புக்களையும் அதில் இணையுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் இன்று நண்பகல் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:-
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிப்பதும், ஜக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான். குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் ஒரு பிரதேச சபையில் ஆட்சி அமைக்க முடியாவிட்டால், ஜ.தே.க அவர்களுக்கு ஆதரவு வழங்கி ஆட்சியமைக்க உதவி செய்யும்.
இத் தேர்தலில் போட்டியிடும் த.தே.கூ மற்றும் ஜ.தே.க கட்சிகள் தவிர்ந்த ஏனைய கட்சிகளுக்கு நான் பகிரங்கமாக வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கின்றேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான ஒரு அணியினை நாங்கள் உருவாக்க வேண்டும். அது தமிழ் மக்கள் பேரவையாக இருந்தாலும், உதய சூரியனாக இருந்தாலும், ஈ.பி.டி.பியாக இருந்தாலும் அனைவரும் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான அணியை உருவாக்க வேண்டும். எல்லோரும் சேர்ந்தால் நிச்சையம் அட்சியை பெற முடியும். மாற்று அணியாக உருவாக வேண்டிய நேரம் இதுதான் என்றார்.

Post a Comment