பணச்சலவை தொடர்பாக, ஆபத்தான 11 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதாக நாடுகளுக்கிடையிலான நிதி நடவடிக்கை செயலணி தெரிவித்துள்ளது.
பணச்சலவை குறித்த அதிக ஆபத்துள்ள மற்றும் கண்காணிப்பு அதிகார வரம்புக்குட்பட்ட 11 நாடுகளை நாடுகளுக்கிடையிலான நிதி நடவடிக்கை செயலணி பட்டியலிட்டுள்ளது.
இதில் இலங்கை, பொஸ்னியா- ஹெர்சகோவினா, வடகொரியா, எதியோப்பியா, ஈரான், ஈராக், சிரியா, ரினிட்டாட் அன் டுபாகோ, துனிசியா, வனாட்டு, மற்றும் யேமன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பட்டியல் நாடுகளுக்கிடையிலான நிதி நடவடிக்கை செயலணியின் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நாடுகள் தீவிரவாதத்துக்கான நிதியிடல் மற்றும் அனைத்துலக நிதி முறைமைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Post a Comment