கச்சத்தீவு திருவிழாவிற்கு இலங்கை அகதிகள் செல்லத்தடை! - Yarl Voice கச்சத்தீவு திருவிழாவிற்கு இலங்கை அகதிகள் செல்லத்தடை! - Yarl Voice

கச்சத்தீவு திருவிழாவிற்கு இலங்கை அகதிகள் செல்லத்தடை!

எதிர்வரும் பெப்ரவரி 23 மற்றும் 24 தேதிகளில் நடைபெற உள்ள கச்சத்தீவு திருவிழாவின் பாதுகாப்பு குறித்த முதல் கட்ட ஆலோசனை கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது.

இராமேஸ்வரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விழாவிற்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இதன்போது கூட்டத்தில் பேசிய மாவட்ட வருவாய் கோட்டாச்சியர்,

எதிர்வரும் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில் திருவிழா நடைபெற உள்ளது. காவல்துறையினரின் தடையில்லா சான்று பெற்றவர்கள் விழாவிற்கு செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர்.

விழாவிற்கு செல்லக்கூடிய பக்தர்களிடம் அரசு வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியமாக இருக்க வேண்டும். மேலும், விழாவில் பங்கு கொள்வதற்கு இலங்கை அகதிகளுக்கு அனுமதி கிடையாது.

தடை செய்யப்பட்ட பொலித்தீன் பொருட்கள், போதைப்பொருட்கள் மற்றும் கடத்தல் பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது என தெரிவித்துள்ளார்.

மேலும், கச்சத்தீவுக்குச் செல்லும் பயணிகள் குறித்த முழுவிசாரணை நடத்தப்படடு அதன் விபரம் கிடைத்த பின் அவர்கள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது.

அத்துடன், பாதுகாப்பு நலன் கருதி பெப்ரவரி மாதம் 21ஆம் தேதி வரை மட்டுமே மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post