ஜனநாயக நாட்டிற்கு பெண்கள் பிரதிநிதித்துவம் தேவை -அங்கஜன் எம்.பி- - Yarl Voice ஜனநாயக நாட்டிற்கு பெண்கள் பிரதிநிதித்துவம் தேவை -அங்கஜன் எம்.பி- - Yarl Voice

ஜனநாயக நாட்டிற்கு பெண்கள் பிரதிநிதித்துவம் தேவை -அங்கஜன் எம்.பி-

நாட்டில் மேலும் ஜனநாயகத்தை வலுப்பேற செய்வதற்கு உள்ளூராட்சி தேர்தலில் பெண் பிரதிநிதிகள் அதிகளவில் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

சரசாலைதெற்கு,அல்லாரை மற்றும் மந்துவில் பகுதி கிராம மக்களுடனான சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்றது.

இச் சந்திப்பில் மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

இம்முறை நடை பெறும் உள்ளூராட்சி சபை தேர்தல் ஜனநாயக ரீதியாக மக்களுக்கு கிடைத்த வெற்றி. கிடைத்த வெற்றியை மக்கள் தமக்கு சாதகமானதாக்கிக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக பரந்து பட்ட சூழலில் அவற்றை நாம் உற்று நோக்க வேண்டும்.
அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தின் ஊடாக வட்டாரமுறைமையிலும் விகிதாசார அடிப்படையிலான பிரதிநிதித்துவம் அமைய இருக்கும் சூழ்நிலையில் மேலும் ஜனநாயகத்திற்கு வலு சேர்க்கும் முகமாக அபிவிருத்தியடைந்த நாடுகளில் காணப்படும் வகையில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சிக்கான பயணத்தில் பெண்களுக்கான பிரதிநிதித்துவமும் முகவரியாக இணைந்து கை கோர்த்திருப்பது சுதந்திர கட்சியின் கை சின்னத்தை வலு சேர்க்கும் என்பது திண்ணம்.

ஆசிய நாடுகளில் அரசியலுக்கான பெண்களின் பிரதிநிதித்துவம் அரிதாகவே காணப்பட்டது ஆனால் கலாசார ரீதியாக குடும்ப செயற்பாடுகளில் மிகவும் அக்கறையுடனும் பாரம்பரிய அனுபவங்களினூடாக சிறப்பாகவே செயற்பட்டவர்கள் இன்று பல நிறுவனங்களில் உயர் நிலைகளில் அங்கம் வகிப்பவர்கள் பெண்களே.
காலத்தின் மாற்றம் காரணமாக உலகமே உற்று நோக்கும் அளவில் பெண்ணியம் என்ற எமது வரையறைகளை தாண்டி பல களங்களில் சாதனையை அடைந்தவர்கள்.

எமது பெண்களின் இன்னொருகளமாக கைசின்னம் ஊடான அரசியல் மறுபிரவேசம் நிச்சயம் அவர்களுடைய பிரதிநிதித்துவம் பிரதேச ரீதியாக வலுசேர்க்கும் என்பதில் ஐயமில்லை என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post