தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அக் கட்சியின் சாவகச்சேரி பிரதேச சபையின் 16 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் குமாரவேல் மற்றும் நகர சபையின் 5 ஆம் வட்டாரத்தில் இராமச்சந்திரன் ஆகிய இரு வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களுமே மேற்படி சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்த மேலும் தெரிய வருவதாவது:-
தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் சாவகச்சேரியில் நேற்றிரவு பிரச்சாரப் பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு மோட்டார் சைக்கில் மற்றும் மகேந்திரா ஜீப் வண்டி ஆகியவற்றில் வந்தவர்கள் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுகொண்டிருந்தவர்களை சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன் போது அங்கு நின்றிருந்த வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என மூவருக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தது.
மேலும் அவர்களை அங்கிருந்து செல்லுமாறும் துரத்தியதாகவும் இதனால் அனைவரும் வேறு வேறு திசைகள் நோக்கி ஓடிச் சென்றதாகவும் வேட்பாளர் குமார வேல் தெரிவித்துள்ளார்.
இதனால் அச்சம் காரணமாக தான் வேறு ஒரு நண்பரின் வீட்டிலேயே இரவு முழுவதும் தங்கியிருந்ததாகவும் இன்று காலை சாவகச்சேரி பொலிஸார் வந்துதன்னை மீட்டுக் கொண்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றையும் தாம் பதிவு செய்துள்ளதாகவும் குமாரவேல் மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment