தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று மார்தட்டிச் சொல்லும் அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொஞ்சம் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று இருந்திருந்தால் என்ன நடக்கும் என்பதை பற்றி சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களுக்கு எடுத்துரைத்துள்ளார்.
யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:-
கடந்த காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்படி உருவாக்கப்பட்டது என்று மக்களுக்கு தெரியும். அது தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது. அதனை யாரும் நிராகரிக்க முடியாது.
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கிய விடுதலைப் புலிகள் இன்று இருந்திருந்தார்களானால் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலமை எவ்வாறு இருந்திருக்கும் என்று எல்லோருக்கும் விளங்கும்.
ஏனென்றால் த.தே.கூ கட்சி தொடங்கியதன் நோக்கம் சரியானது. அது சென்ற திசை சரி. ஆனால் இன்று போக் கொண்டிருக்கும் திசை பிழையானது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் போக்கை சரிப்படுத்த வேண்டிய கடமை மக்களிடம் ,ருக்கின்றது. அதற்கான விழிப்புணர்வுடன் இன்று மக்கள் இருக்கின்றார்கள். கிரமங்கள் ரீதியில் செல்லும் போது அந்த விழிப்புணர்வை மக்களிடையே காணக் கூடியதாக ,ருக்கின்றது என்றார்.

Post a Comment