சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ள பத்மாவத் திரைப்படம் இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தானில் சித்தூரை ஆண்ட ராஜபுத்திர வம்ச ராணி பத்மினியின் கதாபாத்திரத்தில் நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ளார்.
அதில் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சில காட்சிகள் நீக்கப்பட்டு ‘பத்மாவத்’ என பெயர் மாற்றம் செய்த பிறகே இப்படத்துக்கு இந்திய திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி வழங்கியது.
இதைதொடர்ந்து நேற்று இப்படம் நாடு முழுவதும் திரையிடப்பட்டு வெளியானது. இருந்தாலும் பா.ஜனதா ஆளும் குஜராத், அரியானா, கோவா, ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் ‘பத்மாவத்’ படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பாகிஸ்தானில் இப்படத்தை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் படத்தில் இடம்பெற்ற எந்த காட்சியையும் நீக்காமல் திரையிட அனுமதித்துள்ளனர்.
டெல்லியை ஆட்சி செய்த அலாவுதீன் கில்ஜியின் கதாபாத்திரம் இப்படத்தில் முக்கிய இடம்பெறுகிறது. அதில் கில்ஜியை தவறாக சித்தரிப்பதாக கூறி சில காட்சிகளை நீக்குமாறு பாகிஸ்தான் திரைப்பட தணிக்கை வாரியம் உத்தரவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த காட்சியையும் நீக்க உத்தரவிடவில்லை. மாறாக ‘யு’ சான்றிதழுடன் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவர் மொபாஷிர் ஹசன் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ‘‘கலை, புத்தாக்கம் மற்றும் ஆரோக்கியமான பொழுதுபோக்கு அம்சங்களில் திரைப்பட தணிக்கை வாரியம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்ளாது.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Post a Comment