வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினர்களாக சபாரத்தினம் குகதாஸ் மற்றும் அப்துல் நியாஸ் சீனி மொகமெட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர் இமானுவேல் ஆனொல்ட் கடந்த டிசெம்பர் மாதம் பதவி விலகியிருந்தார். யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காகவே அவர் தனது பதவியை விலகியிருந்தார்.
இந்த நிலையில் வடக்கு மாகாண சபையில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்கு அதன் செயலாளரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு புதிய உறுப்பினரின் பரிந்துரையைக் கோரியிருந்தது.
இந்த நிலையில் தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிட்ட சபாரத்தினம் குகதாஸின் பெயர் கட்சியின் செயலாளரால் பரிந்துரைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சபாரத்தினம் குகதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், வடக்கு மாகாண சபையின் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் பதவி விலகியிருந்தார். அவரது இடத்துக்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸால் அப்துல் நியாஸ் சீனி மொகமெட்டின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. வடக்கு மாகாண சபையின் உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment