தமிழ்த் தேசியப் பேரவைக்கு எதிரான வழக்கு மல்லாகம் நீதிமன்றால் தள்ளுபடி - Yarl Voice தமிழ்த் தேசியப் பேரவைக்கு எதிரான வழக்கு மல்லாகம் நீதிமன்றால் தள்ளுபடி - Yarl Voice

தமிழ்த் தேசியப் பேரவைக்கு எதிரான வழக்கு மல்லாகம் நீதிமன்றால் தள்ளுபடி

யாழ்.மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தமிழ்த் தேசியப் பேரவையினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று (30.01.2018) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு வலி வடக்குபிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் வலிவடக்கு பிரதேச உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளருமான சுகிர்தன் ஊடாக தமிழரசுக் கட்சி தாக்கல் செய்திருந்தது.

ஏற்கனவே குறித்த விவகாரம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் காங்கேசன்துறைப் பொலிசாருக்கும் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய குருக்கள் நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அதன்போது ஆலயப் பிரதேசத்தில் பூசை வழிபாடே இடம் பெற்றிருந்ததாகவும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்றும் குருக்கள் கூறியிருந்த நிலையில் எனிவரும் காலங்களிலும் பிரச்சார நடவடிக்கைகளுக்கு இடமளிக்கக் கூடாது என்ற அறிவுறுத்தலுடன் வழக்கு முடிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் பொலிசாருக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் மீள் முறைப்பாட்டினடிப்படையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி மணிவண்ணன், தமிழ்த் தேசியப் பேரவையின் வலிவடக்கு வேட்பாளர் தாயுமானவர் நிகேதன், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் இரட்ணஜீவன் எச்.கூல் முறைப்பாட்டாளரான தமிழரசுக் கட்சி வேட்பாளர் சுகிர்தன் ஆகியோர் மல்லாகம் நீதிமன்றுக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தனர்.

நீதிமன்றில் குறிப்பிட்ட பொலிஸ்தரப்பு

தாங்கள் விசாரணை மேற்கொண்ட அடிப்படையில் ஆலயப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் இடம்பெற்றிருக்கவில்லை என்றும் முகநூல்களில் இருந்து எடுக்கப்பட்டு முறைப்பாட்டாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட புகைப்படங்கள் ஆலய வழிபாடுகளில் ஈடுபடும் புகைப்படங்களே என்றும் மன்றில் தெரியப்படுத்தினர்.

எதிராளிகள் சார்பில் 12 சட்டத்தரணிகள்

குறித்த வழக்கில் தமிழ்த் தேசியப் பேரவை மறற்றும் குருக்கள் சார்பில் 12 சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர். சட்டத்தரணிகள் குருபரன், காண்டீபன், ஜெயரூபன், பார்த்தீபன், ஜோய் மகிழ் மகாதேவா, லலிதாஸ் சர்மா, சுபாஸ்கரன், றோய், கீர்த்தனா, தனுஜா, கஸ்தூரி ஆகியோருடன் சுகாஸ்ஆ ஜராகியிருந்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post