சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பூநகரி பிரதேச சபைக்கான தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று நாச்சிக்குடா பிரதேசத்தில் அக் கட்சியன் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பூநகரி பிரதேச சபையில் போட்டியிடும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எல பலரும் கலந்து கொண்டனர்.
அங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்:-
வட்டார பிரதிநிதித்துவம் பிரதேச மக்களின் நலன்கருதியதே தவிர அரசியல் வாதிகளின் பிரதேச அரசியலை முன்னெடுப்பதற்காக அல்ல எனவும் குறிப்பிட்டார்.
பூநகரி பிரதேச சபையில் கை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும், பூநகரி பிரதேச மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் முன்னெடுக்க மக்கள் வாக்கு பலத்தின் மூலம் கை சின்னத்திற்கு வாக்களித்து பலமானதொரு அணியை ஏற்படுத்தி உங்கள் பிரதேசத்திற்கு உட்கட்டுமான வசதிகளை உரிமைகளோடு பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவித்தார்.
பூநகரி வளமான பிரதேசம் ,யற்கைகளோடு ஒன்றிணைந்து காணப்படுவதுபோல் தமிழ் முஸ்லிம் மக்களும் கை கோர்த்திருப்பது எமது பலமே எனவும் நாம் வழங்கும் வாக்குறுதிகள் முன்னைய கூட்டு அமைப்பின் உறுப்பினர்கள் போல் அல்லாமல் எம்மால் நேரடியாக அபிவிருத்திகளை ஏற்படுத்த முடியும் எனவும் உறுதி அளித்தார்.
இனி வரும் காலங்களில் உங்கள் வாக்குகளையோ, உங்கள் வளங்களையோ யாரும் சுரண்டிக்கொள்ள முடியாது. உங்கள் வாக்குரிமை உங்கள் வளமான எதிகாலதிற்கே என்றார்.
Post a Comment