தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வை பெற்று தருவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழுத்தடிப்பு செய்வதாக தெரிவித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னிணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன், எதிர்க்கட்சியாக செயற்படக் கூடிய திறன் கூட்டமைப்பிடம் இல்லை என விமர்சித்துள்ளார்.
தேசிய அரசாங்கம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அதிக உறுப்பினர்களைக் கொண்ட மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்காமல் சம்பந்தனுக்கு வழங்கியதாக சுரேஸ் பிரேமசந்திரன் சாடியுள்ளார்.
உள்ளுராட்சி மன்ற தேர்தல் அடுத்த மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் கட்சி அலுவலக திறப்பு விழா யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், தமிழர் தாயகப் பகுதிகளில் இதுவரை 65 ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாமல் இராணுவத்தினர் வசமிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Post a Comment