யூ.என்.பியின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்க்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் என்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
அதில் 50 கோடி செலவில் 1000 புத்த விகாரைகளை அமைப்பாதாக குறிப்பிட்டுள்ள விடயத்திற்க்கு எதிராகவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தகவல் வெளியிட்டார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று நண்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கரித்து வெளியிடும் போதே அவர் மேற்க்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
உள்ளூர் அதிகர சபை தேர்தல் முடிவுக்கு வந்துள்ளது. தேர்தல் காலத்தில் நடந்தவை மக்கள் மத்தியில் அச்சம் ஏற்ப்படுத்துயுள்ளது.
யு.என்.பி வடக்கு கிழக்கு மாகாணங்களில் 1000 பெளத்த விகாரைகள் அமைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 50 கோடி ரூபாவில் அமைப்பாதகாவும் சொல்லப்பட்டுள்ளது.
அரசின் பணத்தில் நட்டில் முரன்பாடுகளை ஏற்ப்படுத்தும் இவ்வாறான செயற்ப்பாடுகள் தேவையற்ற ஒன்று.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்து தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற நிலையில் 1000 புத்த விகாரைகள் அமைப்பது நல்லிணக்கம் இல்லை. அது குரோதத்தை ஏற்ப்படுத்தும்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறப்பாடு. இன்று திங்கட்கிழமை
காலையில் மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் கலந்துரையாடல் நடைபெறும் போது இம் இம் முறைப்பாடும் எடுத்துக் கொள்ளப்படும்.
இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை. இனி வரும் காலங்களிலாவது நடக்காம்ல் இருக்க வேண்டும் என்று கோருகின்றோம்.
மதத்தை பயன்படுத்தி ஊடக அறிக்கைகள் வெளியிட்டமை தொடர்பிலும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வல்வெட்டித்துறை நகர சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற போ.சிவஞானசுந்தரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
Post a Comment