2-வது டி20 போட்டி - 118 ரன்கள் எடுத்தது இந்திய அணி |
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவற்ற நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை எடுத்துள்ளது.
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற முதல் டி 20 ஆட்டத்தில் 28 ரன்கள் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் 2-வது டி20 போட்டி சென்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் தவான் களமிறங்கினர். அதிரடி வீரர் ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். அடுத்து தவானுடன் ரெய்னா களமிறங்கினா. இந்தக் கூட்டணி நிதானமாக விளையாடியது. ஆனால் 4-வது ஓவரில் தவான் 14 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து டுமினி வீசிய சுழலில் அவுட் ஆனார்.
தவானுக்கு அடுத்து களமிறங்கிய விராட் கோலி 1 ரன் மட்டுமே எடுத்து டாலா வீசிய பந்தில் கிளாசனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன்பிறகு மணிஷ் பாண்டே - ரெய்னா கூட்டணி அதிரடியாக விளையாட ஆரம்பித்தது. 10-வது ஓவரில் பெலுக்வயோ வீசிய பந்தில் ரெய்னா எல்டபிள்யூ ஆனார்.
5-வது விக்கெட்டுக்கு மனிஷ் பாண்டே, தோனி கூட்டணி இணைந்தது. மனிஷ் பாண்டே அதிரடியாக விளையாடி 48 பந்துகளை சந்தித்து 79 ரன்களை எடுத்தார். தோனி 28 பந்துகளை மட்டுமே சந்தித்து 52 ரன்களை எடுத்தார். 189 ரன்கள் எடுத்தால் என்ற வெற்றி என்ற இலக்கோடு தென் ஆப்பிரிக்கா விளையாடி வருகிறது.
Post a Comment