அழிவின் விளிம்பில் தமிழகத்தின் 2 மொழிகள் |
தமிழகத்தின் 2 மொழிகள் உள்பட இந்தியாவில் சுமார் 42 மொழிகள் அழிவின் விளிம்பில் உள்ளது தெரியவந்துள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் 22 பிரதான மொழிகளும், 234 முக்கிய மொழிகளும், 1,635 வட்டாரப் பேச்சுவழக்கு மொழிகளும் உள்ளன.
இவற்றில், 22 மொழிகள் பட்டியலிடப்பட்ட மொழிகள்; மேலும், 31 மொழிகள் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் அதிகாரப்பூர்வ அந்தஸ்தைப் பெற்றவை.
பட்டியலிடப்படாத மொழிகளாக கருதப்படும் சுமார் 100 மொழிகளை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பேசுகின்றனர்.
அதேசமயம், 10 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் சுமார் 42 மொழிகளை பேசுகின்றனர். இவை விரைவில் அழியும் அல்லது மறைந்து போகும் எனக் கருதப்படுகிறது.
யுனெஸ்கோ அமைப்பும், இந்த 42 மொழிகள் அழியும் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த 42 மொழிகளில் அந்தமான் நிகோபார் தீவுகளில் பேச்சு வழக்கிலுள்ள கிரேட் அந்தமானீஸ், ஜராவா, லமோங்சே உள்ளிட்ட 11 மொழிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், மணிப்பூரில் பேச்சு வழக்கிலுள்ள 7 மொழிகளும், ஹிமாச்சலப் பிரதேசத்தில் பேச்சு வழக்கிலுள்ள 4 மொழிகளும் இடம்பெற்றுள்ளன.
மேலும் ஒடிஸா, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களின் வட்டாரப் பேச்சுவழக்கு மொழிகளும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தைப் பொறுத்தவரை கோட்டா மற்றும் தோடா ஆகிய 2 மொழிகள், இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், மைசூரில் இயங்கி வரும் இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனம் அழிவின் விளிம்பிலுள்ள மொழிகளைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்றார் அந்த அதிகாரி.
Post a Comment