வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் புதன்கிழமை 20 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டு உரிமையாளர் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டவராவார். இவரது மனைவி கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக உள்ளார்.
புதன்கிழமை பாடசாலை முடிந்து மாலை ஆசிரியர் வீட்டுக்கு வந்த போது முன்பக்க கதவு திறக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது நகை வைக்கப்பட்டிருந்த இடம் கிளறப்பட்டிருந்ததுடன், 20 பவுண் நகைகள் திருடப்பட்டிருந்தன என வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடய அறிவியல் பொலிஸாரின் உதவியுடன் நேற்று இந்த வீட்டில் பொலிஸார் ஆய்வு செய்தனர். சந்தேக நபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் கூறினர்.

Post a Comment