நியூ ஆர்லியன்ஸ் துப்பாக்கிசூட்டில் 2 பேர் பலி! |
நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் பகுதியல் மர்மான முறையில் நடந்த துப்பாக்கிசூட்டில் தம்பதியார் இருவர் பலியாகினர்!
இச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி அம்பிரியா வாஷிங்டன் தெரிவிக்கையில்... நேற்றைய தினம் இரவு இந்த துப்பாக்கிச்சூடு நடைப்பெற்றுள்ளது. முதற்கட்ட தகவலில் 5 பேர் இத்துப்பாக்கிசூட்டில் இறந்ததாகவும், பின்னர் இரண்டு பேர் மட்டுமே பலியாகினர் எனவும் மற்ற 3 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.
சென்ட் குலாவுட் அவன்யூ, 9 வது வார்டில் நடந்துள்ள இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இருவரும் தம்பதியர் எனவும், துப்பாக்கிச் சூட்டிற்கு பின்னர் அவர்களை சம்பவயிடத்திற்கு பாதுகாப்பு துறை அதிகாரிகள் செல்கையில், ஒருவர் சடமாக இருந்ததாகவும், மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிசூடு நடைப்பெற்ற இடம் தற்போது காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது!
Post a Comment