யாழ்.மாவட்டத்தில் மட்டும் தேர்தல் குற்றங்கள் தொடர்பில் 40 முறைப்பாடுகளே பதிவு செய்யப்பட்டுள்ளது என்று யாழ்.மாவட்ட அரசாக அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலகருமான என்.வேதநாயன் தெரிவித்தார்.
யாழ்.மாவட்டச் செயலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
தேர்தல் தொடர்பான விதிமுறைகள் மீறப்பட்டதாக சில முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக வீதிகளில் பெயர் எழுதப்படுவது, சுவரொட்டிகள் ஒட்டப்படுவதாகன முறைப்பாடுகள் கிடைத்தன. அந்த முறைப்பாடுகள் மீதான நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வன்முறைகள் என்ற ரீதியில் எந்த முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை.
யாழ்.மாவட்டத்தின் 5 முறைப்பாட்டு மையங்கள் உள்ளன. அதில் தேர்தல் உத்தியோகஸ்தர்களும், பொலிஸாரும் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். முறைப்பாடுகள் பதிவு செயப்படும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் என்ற ரீதியில் இதுவரை 40 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்றார்.

Post a Comment