4 ½ ஆண்டுகளுக்குள் நாடாளுமன்றை கலைக்க முடியாது - Yarl Voice 4 ½ ஆண்டுகளுக்குள் நாடாளுமன்றை கலைக்க முடியாது - Yarl Voice

4 ½ ஆண்டுகளுக்குள் நாடாளுமன்றை கலைக்க முடியாது

நாட்டில் தற்போதுள்ள அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைய, நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடனான தீர்மானமொன்றை நிறைவேற்றாமல், நான்கரை வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது என அரசியலமைப்பு தொடர்பான சட்டத்தரணியான நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்.

எதிர்தரப்பினரால் நாடாளுமன்றை கலைக்க வேண்டுமென கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் உள்ளாட்சி மன்றங்களை இழந்தால், நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்ற பாரம்பரியம் அல்லது முன்னுரிமை இல்லை.

இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் தேர்தல் முடிவுகளை கவனத்தில் எடுக்க வேண்டும்.

தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post