ஈரான் விமான விபத்து - 66 பேர் உயிரிழப்பு |
ஈரான் தலைநகரிலிருந்து யசூஜ் நகருக்கு சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் பயணிகள் அனைவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஈரானின் மூன்றாவது மிகப் பெரிய விமான நிறுவனமான ஆசிமான் விமான நிறுவனத்தின் விமானம் விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெஹ்ரானிலிருந்து புறப்பட்ட விமானம் யாசுஜ் நகரை அடைவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு ரேடாரின் கட்டுப்பாட்டில் இருந்து மறைந்தது. நீண்டநேரமாகியும், விமானத்தின் சமிக்ஞை ரேடாருக்கு கிடைக்கவில்லை. அதையடுத்து அப்பகுதிக்கு மீட்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து விமானம் விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளது.
விபத்தில் விமானத்தில் பயணித்த விமான வேலையாட்கள் உட்பட பயணிகள் 66 பேரும் இறந்துவிட்டனர் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பனிமூட்டம் காரணமாக விமானம் தரையிறங்க முற்பட்டபோது, சாக்ரோஸ் மலைப்பகுதியில் 440 மீட்டர் உயரமுள்ள தேனா மலையில் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று ஈரான் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன
விமானம் விபத்துக்குள்ளான பகுதி அடர்ந்த வனப்பகுதி, என்பதால், அங்கு ஆம்புலெனஸ்கள் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Post a Comment