கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
இன்று பிற்பகல் இடம்பெற்ற இவ்விபத்தில் ஐந்து ஆண்களும் பெண்ணொருவருமே உயிரிழந்ததாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாமென அஞ்சப்படுகின்ற நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கொழும்பில் கட்டடம் இடிந்து வீழ்ந்து மூவர் உயிரிழப்பு: இருவர் படுகாயம்
கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளதோடு, இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (புதன்கிழமை) பிற்பகல் இவ்வனர்த்தம் நேர்ந்துள்ளது. கட்டட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாமென அஞ்சப்படுகின்ற நிலையில், மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இரண்டு ஆண்களும் பெண்ணொருவருமே உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிராண்ட்பாஸ் பாபாபுள்ளே மாவத்தையில் தேயிலையை களஞ்சியப்படுத்தி வைக்கும் மூன்று மாடிகளைக் கொண்ட பழைமைவாய்ந்த கட்டடமொன்றே இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளது.
மீட்பு நடவடிக்கையில் தீயணைப்புப் படையினரும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர். விபத்தைத் தொடர்ந்து குறித்த பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Post a Comment