ஏப்ரல் 7-ம் தேதி சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் மோதல் |
ஐபிஎல் 11-வது சீசன் போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் மோதுகின்றன. சிஎஸ்கே ரசிகர்களுக்கும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கும் மிகப் பெரிய விருந்தாக இந்தப் போட்டி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் போட்டிகளுக்கான ஏலம் சமீபத்தில் முடிந்தது. தடை நீங்கிவிட்ட காரணத்தினால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பங்கேற்க இருக்கிறது. அதனால் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ஏப்ரல் 7-ம் தேதி நடக்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத இருக்கின்றன. இந்தப் போட்டி மும்பையில் நடக்க இருக்கிறது. ஐபிஎல் சீசன் போட்டிகள் 9 நகரங்களில் நடைபெற இருகிறது. மொத்தம் 51 நாட்கள் நடைபெற இருக்கிற இந்த தொடரில் 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் என ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்கள் இடம் பெறுகின்றனர். மொத்தம் 15 லீக் ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி விளையாட இருக்கிறது.
Post a Comment