உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்கெடுப்பு நடவடிக்கைகளுக்காக நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 9ம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை வாக்குப் பெட்டிகள் மற்றும் ஆவணங்கள் விநியோகித்தல் மற்றும் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக தெரிவுசெய்யப்பட்டிருக்கும் 19 பாடசாலைகள் மற்றும் 2 கல்வியியல் கல்லூரிகளுக்கு பெப்ரவரி 07,08,09ம் திகதிகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடவடிக்கைகளுக்காக மூடப்படும் பாடசாலைகள் எதிர்வரும் 12ம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment