பாலிவுட்டில் பாலியல் துன்புறுத்தலா? ஏக்தா கபூர் பதில் |
பாலியல் குற்றசாட்டுகளுக்கு ஆளான ஹாலிவுட் திரைப்பட தாயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டனை போல் பாலிவுட் நடிகர்களும் நடந்துகொள்வதாக ஏக்தா கபூர் பகிங்கரமான குற்றசாட்டுகளை பதிவு செய்துள்ளார்.
இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிகளில் பிரபலமானவர் ஏக்தா கபூர்.
பத்திரிகையாளர் பர்கா தத் தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தொடர்ந்து பாலியல் புகார்களுக்கு உள்ளாகி வரும் ஹாலிவுட்டின் ஹார்வி வெய்ன்ஸ்டைன் போல பாலிவுட்டில் யாராவது இருக்கிறார்களா என்ற கேள்விக்கு, ஹார்வி வெய்ன்ஸ்டின்ஸ் போல பாலிவுட்டிலும் நடிகர்களும் இயக்குனர்களும் பலர் உள்ளதாக குற்றம்சாட்டினார்.
தங்கள் அதிகாரத்தின் மூலம் பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்துபவர்கள் இருக்கிற அதேசமயம் தங்கள் பணிகளை முடித்துக் கொள்ள எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்குபவர்களும் இருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டார்.
Post a Comment