பொன்னாலை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவந்த முதியவர் உயிரிழந்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
சுழிபுரம் வட்டுக்கோட்டை பகுதியினை சேர்ந்த முருகேசு செல்வம் (வயது 68) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவர்.
கடந்த 15ம் திகதி இந்த முதியவர் காரைநகர் திருமணம் செய்து வசித்து வரும் தனது மகளின் வீட்டுக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார். பொன்னாலை பாலத்தில் வந்து கொண்டிருந்த போது பின்பக்கமாக வந்த மோட்டார் சைக்கிள் இவரை மோதிதள்ளியுள்ளது.
முதலில் இவர் வலந்தலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் கூறினர்.
விபத்தில் முதியவர் உயிரிழப்பு
Published byKiruththigan
-
0
Post a Comment