இந்தியா - ஈரான் நாடுகளுக்கிடையில் மிக விரைவில் முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஈரானுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தப்போது, அந்நாட்டுடன் முக்கிய ஒப்பந்தங்களில் கையெமுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது நரேந்திரமோடி ஈரான் ஜனாதிபதி ஹசன் ருவுஹானி சந்தித்தப்போது, அவரை இந்தியாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி இவ்வாரம் ஜனாதிபதி ருவுஹானி இந்தியா வரயிருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவரது வருகையின்போது, இரு நாட்டு வர்த்தக உறவுகள், பிராந்திய மற்றும் உலகலாவிய முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடப்படலாம் என, ஐ.எஸ்.என்.ஏ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஈரான் ஜனாதிபதி ஹசன் ருவுஹானி, 15ஆம் திகதி இந்தியாவுக்கு வருகை தர இருக்கினறார். இவ்வாறு வருகைத் தர இருக்கும் அவர் 17ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார் எனவும் இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஹசன் ருவுஹானி இந்தியா வருகிறார்
Published byKiruththigan
-
0
Post a Comment