தெற்கு மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் |
தெற்கு மெக்சிகோவில் இன்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. அந்நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டிக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஓக்சாகா என்ற பகுதியை மையமாகக் கொண்டு பசிபிக் கடலோரம் 26.7 மைல்கள் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தெற்கு மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் |
மெக்சிகோ நகரத்தில் உயரம் ஆன கட்டிடங்கள் ஒரு நிமிடத்திற்கும் மேல் குலுங்கின. இது தெற்கு பகுதியில் உள்ள கவுதமாலா நகர் வரை உணரப்பட்டு உள்ளது. இதனால் அச்சத்தில் உறைந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீதிகளில் தஞ்சடைந்தனர். பசிபிக் கடலில் நிலநடுக்கம் உருவாகி இருந்தாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.
அந்நாட்டின் செய்தித் தொடர்பாளர் எட்வார்டோ சான்செஸ், நிலநடுக்கத்தின் இரண்டு மணிநேரங்களுக்குப் பிறகு தனது செய்தி குறிப்பில் இறப்பு அல்லது காயங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை என்று கூறினார்.
தெற்கு மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் |
கடந்த ஆண்டு செப்டம்பரில் 2 முறை மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment