பிரபாகரனின் பெயரால் அரங்கை அதிரவைத்த –க.சுகாஸ்- - Yarl Voice பிரபாகரனின் பெயரால் அரங்கை அதிரவைத்த –க.சுகாஸ்- - Yarl Voice

பிரபாகரனின் பெயரால் அரங்கை அதிரவைத்த –க.சுகாஸ்-

ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பது என்ன தவறு? என்ற தமீழீழ விடுதலைப் புலிகளின் வசனத்தையும், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடை நாமத்தினாலும் நல்லூர் கிட்டுப்பூங்கா கரகோசத்தால் அதிர்ந்தது.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் கனகரட்ணம் சுகாஸ் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு உரையாற்றியுள்ளார்.

இவ்வளவு காலமும் நாங்கள் கஷ்டப்படது வீண் போகவில்லை, ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பது என்ன தவறு? மக்கள் தெளிவடைந்து விட்டார்கள், அதனால் தான் இன்று பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டுள்ளார்கள்.

வடக்கு கிழக்கு இணைப்பு, தேசம் சுய நிர்ணயம், ஆகியவற்றிக்கு ஆதரவாகவும், இடைக்கால அறிக்கைக்கும், சிங்கள பௌத்தமயமாக்கலுக்கும் எதிரான கூட்டம் தான் இது, இனியும் மக்களை ஏமாற்றி யாரும் அரசியல் செய்ய முடியாது. மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்றுவிட்டார்கள்.

இதே இடத்தில் நேற்றைய தினம் (நேற்றுமுன்) நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளார் சுதந்திரன் ஜி.ஜி பொன்னம்பலம் மற்றும் மாமனிதர் குமார் பொன்னம்பலம் ஆகியோரை விமர்சித்துள்ளார். பொய்யானவற்றை கூறி வரலாற்றை பிழையாக கற்பிக்க முயல்கின்றார் சுதந்திரன். தமிழர்களுக்காக ஜ.ஜி பொன்னம்பலம் 50:50 க்கு கேட்ட போது சுமந்திரன் பிறக்கவில்லை,

தமிழ் மக்களுக்காக உயிர் தியாகம் செய்து தமிழீழ விடுதலைப் புலிகளால் மாமனிதர் பட்டம் வழங்கப்பட்ட குமார் பொன்னம்பலத்தை விமர்சிக்க சுமந்திரனுக்கு அருகதையே இல்லை. இவர்கள் பற்றி சுமந்திரனோடு பொது விவாதம் நடாத்த தயார்.

ரணில் செல்வதையும், மைத்திரி செல்வதையும் கேட்டு கதைத்து கொண்டிருந்தால் தமிழர் வரலாறு பற்றி சுமந்திரனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான். முதலில் அவர் வரலாற்றை படிக்க வேண்டும். அடுத்து ஒற்றையாட்சியை சமஷ்டியாட்சி என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பிரச்சாரம் செய்து வருகின்றது. அதில் எந்த உண்மையும் என்பது மக்களுக்கு தெரியும்.

2 கோடிக்காக ஒன்றுமல்லாத வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். சில கோடிகளுக்காக ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டு தமிழினத்தினை விற்று விடுவார்கள். ஆகவே மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். விலைபோகும் அரசியல் தலைமைகளின் ஏமாற்று வேலைகளில் இருந்து தமிழ் மக்கள் விடுபட வேண்டும். மாற்றம் ஒன்று வர வேண்டும். அந்த மாற்றம் தமிழ் உணர்விலிருந்து, தமிழ்த் தேசியத்தில் இருந்து வர வேண்டும்.

நாங்கள் பதவிகளை துறந்தது கொள்கைக்காக. ஆகவே மக்கள் எமக்கொரு சந்தர்ப்பத்தை தர வேண்டும், இனிவரும் காலங்களில் அந்த சந்தர்ப்பத்தை மக்கள் எமக்கு தருவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. அடுத்த பொது தேர்தலில் தமிழ் மக்களுடைய பேரம்பேசும் சக்தியாக நாங்கள் இருப்போம்.

சாவகச்சேரியில் ரவிராஜ் சிலை திறக்கப்பட்ட போது புலிகளின் தமிழீழ உயர் விருதாக கருதப்படும் மாமனிதர் பட்டத்தை நீக்கி தான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் சிலையை திறந்துள்ளானர். இவ்வாறு கூட்டமைப்பு அனைத்து இடங்களிலும் புலிநீக்க அரசியலை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

தமிழர் வரலாறு, தமிழர் இருப்பு, தமிழ்தேசியம், காப்பாற்றப்பட வேண்டும். அதற்காக நாங்கள் செயற்பட தயார், தூய தமிழ்த்தேசிய அப்பழுக்கற்ற அரசியலை தலைவர் பாதையில் நடாத்தி செல்ல நாங்கள் தயார். மக்கள் எமக்கொரு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post