கேரள நடிகையின் கண்ணசைவு பெரிதல்ல - நடிகர் சந்தானம் |
கேரள நடிகை பிரியா வாரியர் பாடல் காட்சியில் கண்ணசைத்ததை பெரிதாக பேசும் ரசிகர்கள், நமது தமிழ் பெண்களின் திறமையையும் பாராட்ட மறக்கக்கூடாது என நடிகர் சந்தானம் பேசியுள்ளார்.
`Oru Adaar Love’ என்ற மலையாளப் படத்தில் இடம்பெற்றுள்ள, "மாணிக்க மலராய பூவி" என்ற பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு இணையத்தில் வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் வெளியான சில நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் ஹிட் அடித்தது.
இந்த பாடலில் 2 நிமிடங்களுக்கும் குறைவாக இடம்பெறும் பிரியா வாரியர் தான் கண்ணசைவில் லட்சக் கணக்கான ரசிகர்களைக் கவர்ந்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டானார்.
இந்நிலையில் இது குறித்து பெரம்பலூரில் தனியார் கல்லூரி கலை விழாவில் பேசிய நடிகர் சந்தானம், கேரள நடிகை கண்ணசைத்ததை பெரிதாக பேசும் ரசிகர்கள் தமிழ் பெண்களின் திறமையையும் பாராட்ட வேண்டும் என தெரிவித்தார்.
Post a Comment