கிழக்கில் உள்ளூராட்சி மன்றங்களில் கூட்டாட்சி ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்ற ஒன்றுகூடலில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
நாடளாவிய ரீதியில் போட்டியிட்ட 19 மாவட்டங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 185 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. 13 சபைகளில் ஆட்சியமைக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.
இது தொடர்பில் கொள்கை அளவில் இணக்கம் காணப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன என்றார்.
முஸ்லிம் காங்கிரஸ் த.தே.கூவுடன் பேச்சு
Published byKiruththigan
-
0
Post a Comment