மண்ணென்னை என நிணைத்து பெற்றோலினை ஊற்றி அடுப்பு மூட்டி எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் சுதுமலை தெற்கு மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் ஆறுமுகம் துர்ராஜா (வயது 59) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் கூறினர்.
கடந்த 5ம் திகதி வீட்டில் நின்ற பிள்ளைகள் வெளியில் சென்றுள்ளனர். மனைவியும் இந்த முதியவரும் இருந்துள்ளனர். மனைவி கடைக்கு சென்றுள்ளார். தேநீர் குடிப்பதற்காக அடுப்பினை மூட்டுவதற்கு மகள் வாங்கி வைத்திருந்த பெற்றோல் காணை எடுத்து அடுப்பு மூட்டுவதற்கு ஊற்றியுள்ளார்.
முகத்தில் தீ பற்றிக்கொண்டுள்ளதுடன் தீயில் எரிந்து கொண்டு இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மனைவி கடைக்கு சென்று விட்டு திரும்பிய போது கணவன் தீயில் எரிவதை கண்டு தண்ணீர் தொட்டிக்குள் இழுத்து சென்று போட்டுள்ளார்.
பின்னர் தீ கட்டுப்படுத்தப்பட்ட யாழ்போதனா வைத்தியசாலையில் கடந்த 1வாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
தீக்காயங்களுக்கு உள்ளான குடும்பஸ்தர் உயிரிழப்பு
Published byKiruththigan
-
0
Post a Comment