சிவாஜிலிங்கத்திற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு
முல்லைத்தீவு வட்டுவாகலில் அமைந்துள்ள கோத்தபாய கடற்படை முகாம் முன் நேற்று நடைபெற்ற நில மீட்பு போராட்டம் தொடர்பில் நில அளவை திணைக்கள அதிகாரிகளால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் நில அளவை திணைக்களத்தின் வாகனத்தின் மீது தாக்குல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பிலேயே முறைப்பாடு பதிவு செய்துள்ளது.
குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சிவாஜிலிங்கத்திடம் வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment