பசுபிக் நாடான தொங்காவில் சூறாவளி வீசியதன் காரணமாக, அந்நாட்டின் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாடாளுமன்றக் கட்டடம் பாரியளவில் சேதமடைந்துள்ளது.
மேற்படி நாட்டில் நேற்று இரவு வீசிய பாரிய சூறாவளி காரணமாக, பலத்த சேதங்கள் ஏற்பட்டதுடன், நாடாளுமன்றக் கட்டடத்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றக் கட்டடத்தின் கூரைகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டுச் சேதமடைந்துள்ளதுடன், மின்சார இணைப்புகளும் அறுந்துள்ளதாக, ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
சூறாவளி காரணமாக, ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறி தற்காலிகத் தங்குமிடங்களில் தங்கியுள்ளனர்.
மேலும், அந்நாட்டில் சூறாவளி வீசும் அபாயம் காணப்பட்ட நிலையில், அந்நாட்டு அரசாங்கம் அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொங்கா நாட்டில் சூறாவளி
Published byKiruththigan
-
0
Post a Comment