ஏழாலை கிழக்கு பகுதியில் உள்ள வீட்டுக்கிணற்றில் இருந்து குடும்ப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சுண்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பாலகிரு~;ணன் அனுசா வயது 45 என தெரிவிக்கப்பட்டது. வீட்டில் இருந்த உறவினர்கள் வெளியூருக்கு சுற்றுலா சென்றுள்ளனர். (நேற்று 19) இரவு உறவினர்களுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
காலை அயல்வீட்டுக்காரர் வந்து பார்த்த போது கதவு திறந்திருந்ததுடன், வீட்டில் இருந்த பெண்ணை காணாது தேடியுள்ளனர். கிண்ற்றினை எட்டி பார்த்த போது சடலமாக காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இறப்பு விசாரணைகளை வைத்தியசாலையின் திடிர் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
இறப்பு விசாரணைகளை வைத்தியசாலையின் திடிர் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு
Published byKiruththigan
-
0
Post a Comment