கூல் கட்சி சார்ந்து செயற்படுகிறார் -கு.குருபரன்- - Yarl Voice கூல் கட்சி சார்ந்து செயற்படுகிறார் -கு.குருபரன்- - Yarl Voice

கூல் கட்சி சார்ந்து செயற்படுகிறார் -கு.குருபரன்-

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் கூல் தேர்தல் விதிமுறைகளை மீறி பக்கச்சார்பாக செயற்படுகின்றார் என்று யாழ்.பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை தலைவர் கு.குருபரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மல்லாகம் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் கூல் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில நேற்று நண்பகல் யாழ்.ஊடகா அமையத்தில் நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம்தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-

பக்கச்சார்பாக தான் நடந்து கொள்ளவில்லை என்று ரடணஜீவன் கூல் கூறுவது மிகவும் நகைப்புக்கு இடமானா, வருந்நதத்தக்கது.
தமிழரசு கட்சியின் மேஜர் வேட்பாளாராக உள்ள இமானுவேல் ஆனல்ட் ஊர்வலத்தில் பங்கு கொண்டமை தொடர்பில் ஆதாரங்கள் இல்லை என்பதால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவிலலை என்று கூறுகின்றார்.

தமிழ் தேசியப் பேரவை தொடர்பில் முறைப்பாடுகளை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கவும் முகப்புத்தகங்களை தேடும் கூலுக்கு, ஆனல்ட் கலந்து கொண்ட ஊர்வலம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தாராளமாக உலாவும் கானொளிகள் கண்ணுக்கு தெரியவில்லையா?
தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பெண் வேட்பாளரை மிரட்டினார் என்பது தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்ணே சாட்சியமளித்துள்ளார். இவை இன்னும் நீதிமன்றத்திற்கு வந்ததாக தெரியவில்லை.

ஆனால் ஆலயத்திற்கு வெளியில் கூடிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரை இதுரை 3 தடவைகள் நீதிமன்றத்தின் முன் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஊர்கவலங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன, மிரட்டுவது, பலத்தை பயன்படுத்துவது தேர்தல் சட்டங்கள் ஊடாக தடை செய்யப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி தேர்தல் சட்டம் 2012 ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. அதன் பிரகாரம் கட்சியானது சமய வழிபாட்டில், தங்களுயடை பரப்புரை விளம்பரங்களை செய்தால் பிழை என்று கூறப்படுகின்றது. ஆனால் வேட்பாளரின் வழிபாட்டு உரிமையை தடுக்க முடியாது என்றும் கூறப்படுகின்றது.

மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்தில் டக்ளஸ் தேவானந்தா, விஜயகலா மகேஸ்வரன், அங்கஜன் இராமநாதன், மாவை சேனாதிராஜா சென்ற அர்சணை செய்யலாம் என்றால் ஏன் தமிழ் தேசிய முன்னணியினர் சென்று அர்சணை செய்ய முடியாது?
இந்த சட்டம் அன்று கொண்டுவரப்பட்டதற்கு காரணம் தென்னிலங்கையில் உள்ள ஒவ்வொரு விகாராபதிகளும் ஒவ்வொரு கட்சி சார்ந்தவர்கள். அவர்கள் வெளிப்படையாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றவர்கள். விகாரைகளில் பரப்புரைகளை நடத்துபவர்கள். இதனை தடுப்பதற்கே அந்த சட்டம் அன்று கொண்டுவரப்பட்டது.

ஒரு குறிப்பிட்ட கட்சி இன்னுமொரு கட்சிக்கு எதிராக தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தேர்தல் சட்டங்களையும், நீதிமனற நீயாயாதிக்கத்தையும் பயன்படுத்தியுள்ளது.
தேர்தல் பிரச்சாரம் தேர்தல் களங்களில் நடக்கட்டும். நீதிமன்றத்தில் நடக்கக் கூடாது. தேர்தல் ஆணைக்குழுவில் உள்ள தாம் சார்ந்தவர்களை பயன்படுத்திக் கொண்டு இவ்வாறு பிரச்சாரம் செய்ய முடியாது.

வைத்திய சாலை மருந்துப் பையில் தேர்தல் பரப்புரை செய்த அங்கஜன் இராமநாதனுக்கு எதிரான வழக்கு எந்தளவில் உள்ளது என்பது தெரியாது. இதுவரை அங்கஜன் இராமநாதனுக்கு எதிராக குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை.
தேர்தல் ஆணைக்குழுவில் உள்ளவரே கட்சி உறுப்பினர்களை காவாலிகள் என்று கூறும் அளவிற்கு அவருடைய செயற்பாடுக உள்ளது.

ஆனால் மஹிந்த தேசப்பிரிய தலமையிலான தேர்தல் ஆணைக்குழுவின் மீது எமக்கு எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லை. அவர் நடுநிலையானவர். இயன்றவரை தேர்தல் முறைமையை பக்கச்சார்பற்று திறமையாக நடத்தி வருகின்றார்.
ஆனால் குறிப்பிட்ட தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்தான், தேர்தல் ஆணைக்குழுவின் பொது விம்பத்திற்கும், மக்கள் அதன் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும் முரண்பாடாக செயற்படுகின்றார்.

குறிப்பிட்ட ஒரு கட்சியின் பிரச்சாரத்திற்கு துணை போகின்றார்.
தமிழரசு கட்சி சம்மந்தமான குற்றச்சாட்டுக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டிற்கும் அவர்கொண்ட அனுகுமுறையே போதும். கூல் பக்கச்சார்பாக செயற்படுகின்றார் என்பதை வெளிப்படுத்த.

சுயாதீன ஆணைக்குழு என்ற பெயரில் என்னை ஒருவரும் கேள்விக்கு உட்படுத்த முடியாது. நான் எவ்வாறும் நடந்து கொள்வேன் என்று சொல்வது சட்டத்தின் ஆட்சிக்குரிய பேச்சு இல்லை. இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர் கூலுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முக்கணியினருக்கு நான் விதந்துரைக்கின்றேன்.

சுயாதீன ஆணைக்கழு சுயாதினமாக இருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் பொறுப்புக் கூற வேண்டும். தேர்தல் ஆணைக்குழுவை உபகரண தேவைப்படுத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது என்றார். 

0/Post a Comment/Comments

Previous Post Next Post