மேடையிலேயே தளபதியிடம் கெஞ்சிய ரோபோ சங்கர் |
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை பற்றி யாரும் சொல்லி தெரிவதில்லை. திரையுலக பிரபலங்களும் விஜய்க்கு ரசிகர்களாக உள்ளார்கள்.
இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த மெர்சல் படம் மெகா ஹிட்டாகி இருந்தது. இந்த படத்திற்காக பிரபல பத்திரிக்கை நிறுவனம் தளபதி விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருதை வழங்கி இருந்தது. இந்த நிகழ்ச்சியை காமெடி நடிகரான ரோபோ ஷங்கர் தொகுத்து வழங்கி இருந்தார்.
விஜய்க்கு விருது வழங்கிய போது ரோபோ ஷங்கர் விஜய் சார் எப்போது உங்க படத்துல சதீஷ் தான் காமெடியனாக நடிக்கணுமா? எனக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டிங்களா? என மேடையிலேயே கெஞ்சி அரங்கத்தை கலகலப்பாக்கியுள்ளார்.
Post a Comment